caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 68

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:68

إِنَّ أَوْلَى ٱلنَّاسِ بِإِبْرَٰهِيمَ لَلَّذِينَ ٱتَّبَعُوهُ وَهَٰذَا ٱلنَّبِىُّ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱللَّهُ وَلِىُّ ٱلْمُؤْمِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக இப்ராஹீமுக்கு மக்களில் மிக நெருங்கியவர், அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், (இஸ்லாமை ஏற்ற) நம்பிக்கையாளர்களும்தான். அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக இப்ராஹீமுக்கு மக்களில் மிக நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், (இந்த நபியை) நம்பிக்கை கொண்டவர்களும்தான். அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன் (இன்னும், உதவியாளன்) ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi68. நிச்சயமாக இப்ராஹீமுக்கு மனிதர்களில் நெருங்கியவர் (எவர் என்றால்) அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், (இவரை) நம்பிக்கை கொண்டவர்களும்தான். அல்லாஹ் இந்த நம்பிக்கையாளர்களை (நேசித்து) பாதுகாப்பான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70