caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 55

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:55

إِذْ قَالَ ٱللَّهُ يَٰعِيسَىٰٓ إِنِّى مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَىَّ وَمُطَهِّرُكَ مِنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَجَاعِلُ ٱلَّذِينَ ٱتَّبَعُوكَ فَوْقَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ ثُمَّ إِلَىَّ مَرْجِعُكُمْ فَأَحْكُمُ بَيْنَكُمْ فِيمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக! "ஈஸாவே நிச்சயமாக நான் உம்மை (பூமியிலிருந்து) கைப்பற்றுவேன்; உம்மை என் பக்கம் உயர்த்துவேன்; நிராகரிப்பாளர்களிலிருந்து உம்மைப் பரிசுத்தப்படுத்துவேன்; உம்மைப் பின்பற்றுபவர்களை இறுதிநாள் வரை நிராகரிப்பவர்களுக்கு மேலாக ஆக்குவேன்."(நிராகரிப்பாளர்களே) பிறகு என் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பேன்.
Tamil Translation - Omar Sharif“ஈஸாவே நிச்சயமாக நான் உம்மை (பூமியிலிருந்து) கைப்பற்றுவேன்; உம்மை என் பக்கம் உயர்த்துவேன்; நிராகரிப்பாளர்களிலிருந்து உம்மைப் பரிசுத்தப்படுத்துவேன்; உம்மை (நபியாக ஏற்று) பின்பற்றியவர்களை இறுதிநாள் வரை (உமது நபித்துவத்தை) நிராகரித்தவர்களுக்கு மேலாக ஆக்குவேன்” என அல்லாஹ் கூறிய சமயத்தை (நபியே) நினைவு கூர்வீராக! (நிராகரிப்பாளர்களே!) பிறகு என் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. ஆக, (ஈஸாவின் விஷயத்தில்) நீங்கள் கருத்து வேறுபாடு செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு மத்தியில் நான் தீர்ப்பளிப்பேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi55. (ஈஸாவை நோக்கி) அல்லாஹ் கூறியதை (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துவீராக!: ‘‘ஈஸாவே நிச்சயமாக நான் உமக்கு (உமது) ஆயுளை முழுமைப்படுத்துவேன். உம்மை நம்மளவில் உயர்த்திக்கொள்வேன். நிராகரிப்பவர்களி(ன் அவதூறி)லிருந்து உங்களைப் பரிசுத்தமாக்கிவைப்பேன். உங்களைப் பின்பற்றுபவர்களை நிராகரிப்பவர்கள் மீது இறுதி நாள்வரை மேலாக்கியும் வைப்பேன்'' (என்று கூறி, ஈஸாவே! அந்நிராகரிப்பவர்களை நோக்கி, நான் கூறியதாக நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வாகிய) என்னிடமே நீங்கள் மீண்டும் வருவீர்கள். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவற்றைப் பற்றி (அந்நேரத்தில்) நான் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்'' (என்றும் கூறினான்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70