قَالَ رَبِّ ٱجْعَل لِّىٓ ءَايَةً قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَٰثَةَ أَيَّامٍ إِلَّا رَمْزًا وَٱذْكُر رَّبَّكَ كَثِيرًا وَسَبِّحْ بِٱلْعَشِىِّ وَٱلْإِبْكَٰرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version"என் இறைவா! எனக்கோர் அத்தாட்சியை ஆக்கு" என்று (ஸகரிய்யா) கூற. "உம் அத்தாட்சி, சாடையாக தவிர மூன்று நாட்கள் மக்களுடன் நீர் பேசாமல் இருப்பதாகும். உம் இறைவனை அதிகம் நினைவு கூறுவீராக! மாலையிலும் காலையிலும் அவனைத் துதித்து தூய்மைப்படுத்துவீராக!'' என்று (அல்லாஹ் பதில்) கூறினான்.
Tamil Translation - Omar Sharif“என் இறைவா! எனக்கோர் அத்தாட்சியை ஏற்படுத்து!’’ என்று (ஸகரிய்யா) கூறினார். “உமக்கு அத்தாட்சியாவது, சாடையாக தவிர மூன்று நாட்கள் மக்களுடன் நீர் பேசமுடியாமல் இருப்பதாகும். இன்னும், உமது இறைவனை அதிகம் நினைவு கூர்வீராக! மாலையிலும் காலையிலும் (ஸுப்ஹானல்லாஹ் என்று கூறி) அவனைத் துதிப்பீராக!’’ என்று அல்லாஹ் (பதில்) கூறினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi41. (அதற்கு) ஜகரிய்யா ‘‘என் இறைவனே! இதற்கு எனக்கொரு அத்தாட்சி அளிப்பாயாக'' என்று கேட்டார். அதற்கு (இறைவன்) ‘‘உமக்கு அளிக்கப்படும் அத்தாட்சியாவது மூன்று நாள்கள் வரை ஜாடையாகவே தவிர நீர் மனிதர்களுடன் பேசமாட்டீர். (அந்நாள்களில்) நீர் உமது இறைவனை அதிகமாக நினைத்துக் கொண்டும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதிசெய்து கொண்டும் இருப்பீராக'' என்று கூறினான்.