caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 26

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:26

قُلِ ٱللَّهُمَّ مَٰلِكَ ٱلْمُلْكِ تُؤْتِى ٱلْمُلْكَ مَن تَشَآءُ وَتَنزِعُ ٱلْمُلْكَ مِمَّن تَشَآءُ وَتُعِزُّ مَن تَشَآءُ وَتُذِلُّ مَن تَشَآءُ بِيَدِكَ ٱلْخَيْرُ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: "அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் உரிமையாளனே! நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய்; நாடியவரிடமிருந்து ஆட்சியை பறிக்கிறாய்; நாடியவரை கண்ணியப்படுத்துகிறாய்; நாடியவரை இழிவுபடுத்துகிறாய்; நன்மை உன் கையில்தான் இருக்கிறது; நிச்சயமாக நீ எல்லாப் பொருளின் மீதும் பேராற்றலுடையவன்."
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் உரிமையாளனே! நாடியவருக்கு நீ ஆட்சியைக் கொடுக்கிறாய்; நாடியவரிடமிருந்து நீ ஆட்சியை பறிக்கிறாய்; நாடியவர்களை நீ கண்ணியப்படுத்துகிறாய்; நாடியவர்களை நீ இழிவுபடுத்துகிறாய்; நன்மை எல்லாம் உன் கையில்தான் இருக்கிறது; நிச்சயமாக நீ ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi26. (நபியே! பிரார்த்தித்து) கூறுவீராக: ‘‘எங்கள் அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகிறாய். நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்துகிறாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவாய்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70