ٱلَّذِينَ يَذْكُرُونَ ٱللَّهَ قِيَٰمًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِى خَلْقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَٰطِلًا سُبْحَٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (எவர்கள் என்றால்) நின்றவர்களாகவும், உட்கார்ந்தவர்களாகவும், தங்கள் விலாக்கள் மீது (படுத்தவர்களாகவு)ம் அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள். வானங்கள், பூமி படைக்கப்பட்டிருப்பதில் சிந்திப்பார்கள். எங்கள் இறைவா! நீ இதை வீணாக படைக்கவில்லை. உன்னைத் தூய்மைப்படுத்துகிறோம். ஆகவே, (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்று!
Tamil Translation - Omar Sharifஅவர்கள் நின்றவர்களாகவும், உட்கார்ந்தவர்களாகவும், தங்கள் விலாக்கள் மீது (படுத்தவர்களாகவு)ம் அல்லாஹ்வை (துதித்துப் புகழ்ந்து தொழுது) நினைவு கூர்வார்கள். இன்னும், வானங்கள், பூமி படைக்கப்பட்டிருப்பதில் அவர்கள் சிந்திப்பார்கள். (இன்னும், அவர்கள் பிரார்த்திப்பார்கள்:) “எங்கள் இறைவா! நீ இதை வீணாக படைக்கவில்லை. உன்னைத் தூய்மைப்படுத்துகிறோம். ஆகவே, (நரக) நெருப்பின் தண்டனையிலிருந்து எங்களைக் காப்பாற்று!”
Tamil Translation - Abdulhamid Baqawi191. இவர்கள் நின்ற நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதை ஆராய்ச்சி செய்வார்கள். மேலும், ‘‘எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணாக படைக்கவில்லை. நீ மிகத்தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக!