ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ عَهِدَ إِلَيْنَآ أَلَّا نُؤْمِنَ لِرَسُولٍ حَتَّىٰ يَأْتِيَنَا بِقُرْبَانٍ تَأْكُلُهُ ٱلنَّارُ قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌ مِّن قَبْلِى بِٱلْبَيِّنَٰتِ وَبِٱلَّذِى قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوهُمْ إِن كُنتُمْ صَٰدِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version"நெருப்பு (அதை) சாப்பிடும்படியான ஒரு (குர்பானி) பலியை எங்களிடம் கொண்டு வரும் வரை ஒரு தூதரை நாங்கள் நம்பிக்கை கொள்ளக்கூடாது என்று அல்லாஹ் எங்களிடம் நிச்சயமாக உறுதிமொழி வாங்கினான்" என்று கூறினார்கள். (நபியே!) கூறுவீராக: "எனக்கு முன்னர் உங்களிடம் பல தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளையும் நீங்கள் கூறியதையும் திட்டமாக கொண்டு வந்தார்கள். ஆகவே, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை ஏன் கொலை செய்தீர்கள்?"
Tamil Translation - Omar Sharif“நெருப்பு அதை சாப்பிடும்படியான ஒரு (குர்பானி) பலியை எங்களிடம் தூதர் எவரும் கொண்டுவருகின்ற வரை நாங்கள் அவரை நம்பிக்கை கொள்ளக்கூடாது என்று அல்லாஹ் எங்களிடம் நிச்சயமாக உடன்படிக்கை செய்திருக்கிறான்’’ என்று அவர்கள் கூறினார்கள். (நபியே!) கூறுவீராக: “எனக்கு முன்னர் உங்களிடம் பல தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளையும் நீங்கள் கூறியதையும் திட்டமாக கொண்டு வந்தார்கள். ஆகவே, நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை (ஏன் நிராகரித்தீர்கள். இன்னும்,) ஏன் கொலை செய்தீர்கள்?’’
Tamil Translation - Abdulhamid Baqawi183. இவர்கள் ‘‘எத்தூதராயினும், அவர் கொடுக்கும் பலியை நெருப்பு (கரித்து) புசிப்பதை அவர் நமக்குக் காட்டும்வரை அவரை நாங்கள் நம்பிக்கை கொள்ளக் கூடாது என்று நிச்சயமாக அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியிருக்கிறான்'' என்றும் கூறுகின்றனர். (அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘எனக்கு முன்னர் உங்களிடம் வந்த நபிமார்களில் பலர் நீங்கள் கேட்ட இதையும் (வேறு பல) தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்தார்கள். (அப்படி இருக்க, உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?''