لَقَدْ مَنَّ ٱللَّهُ عَلَى ٱلْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ يَتْلُوا۟ عَلَيْهِمْ ءَايَٰتِهِۦ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ ٱلْكِتَٰبَ وَٱلْحِكْمَةَ وَإِن كَانُوا۟ مِن قَبْلُ لَفِى ضَلَٰلٍ مُّبِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்கள் மீது திட்டமாக அல்லாஹ் அருள் புரிந்தான். ஏனெனில், அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு மத்தியில் அனுப்பினான். அவர்கள் மீது அவனுடைய வசனங்களை (அவர்) ஓதுகிறார்; அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். நிச்சயமாக (அவர்கள் இதற்கு) முன்னர் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தனர்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்கள் மீது திட்டமாக அல்லாஹ் அருள் புரிந்தான் - அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு மத்தியில் அனுப்பியபோது. அவர் அவர்களுக்கு அவனுடைய வசனங்களை ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும், அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார்; இன்னும், அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். நிச்சயமாக (அவர்கள் இதற்கு) முன்னர் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi164. அல்லாஹ், நம்பிக்கையாளர்களின் மீது மெய்யாகவே அருள் புரிந்திருக்கிறான். அவர்களுக்காக ஒரு தூதரை (அதுவும்) அவர்களில் இருந்தே அனுப்பினான். அவர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களை பரிசுத்தமாக்கியும் வைக்கிறார். மேலும், அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தனர்.