caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 165

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:165

أَوَلَمَّآ أَصَٰبَتْكُم مُّصِيبَةٌ قَدْ أَصَبْتُم مِّثْلَيْهَا قُلْتُمْ أَنَّىٰ هَٰذَا قُلْ هُوَ مِنْ عِندِ أَنفُسِكُمْ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்கள் மூலம் உஹுத் போரில்) உங்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்ட போது (‘பத்ரு' போரில் அவர்களிடம்) அது போன்று இருமடங்கை நீங்கள் அடைந்திருக்க, இது எங்கிருந்து ஏற்பட்டது எனக் கூறுகிறீர்களா? (நபியே) கூறுவீராக: உங்களிடமிருந்துதான் அது ஏற்பட்டது. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif(நிராகரிப்பாளர்கள் மூலம் உஹுத் போரில்) உங்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டபோது (‘பத்ர்’ போரில் அவர்களுக்கு) அது போன்று இருமடங்கை நீங்கள் கொடுத்திருக்க, “இ(ந்த சோதனையான)து எங்கிருந்து வந்தது” என்று கூறுகிறீர்களா? (நபியே!) கூறுவீராக: “உங்களிடமிருந்துதான் அது ஏற்பட்டது. (அதற்கு காரணம் நீங்கள்தான்.)” நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi165. (நம்பிக்கையாளர்களே! ‘‘பத்ரு' போரில்) இதைவிட இருமடங்கு சிரமத்தை நீங்கள் அவர்களுக்கு உண்டு பண்ணியிருந்தும் இந்த சிரமம் (உஹுத் போரில்) உங்களுக்கு ஏற்பட்ட சமயத்தில் இது எப்படி (யாரால்) ஏற்பட்டது? என நீங்கள் கேட்(க ஆரம்பித்துவிட்)டீர்கள். (நீங்கள் செய்த தவறின் காரணமாக) உங்களால்தான் இது ஏற்பட்டதென்றும், நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் என்றும் (நபியே!) கூறுவீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70