فَبِمَا رَحْمَةٍ مِّنَ ٱللَّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ ٱلْقَلْبِ لَٱنفَضُّوا۟ مِنْ حَوْلِكَ فَٱعْفُ عَنْهُمْ وَٱسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى ٱلْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَوَكِّلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அல்லாஹ்வின் கருணையினால் அவர்களுக்கு மென்மையானீர். நீர் கடுகடுப்பானவராக, உள்ளம் கடுமையானவராக இருந்திருந்தால் உம் சுற்றுப்புறத்திலிருந்து பிரிந்திருப்பார்கள். ஆகவே, அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காக (அல்லாஹ்விடம்) மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசிப்பீராக! (முடிவை) நீர் உறுதிசெய்தால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை (தவக்குல்) வைப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) நம்பிக்கை வைப்பவர்களை நேசிக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஆக, (நபியே!) நீர் அல்லாஹ்வின் கருணையினால் அவர்களுக்கு மென்மையானவராக ஆகிவிட்டீர். இன்னும், நீர் கடுகடுப்பானவராகவோ, உள்ளம் கடுமையானவராகவோ இருந்திருந்தால் உமது சுற்றுப்புறத்திலிருந்து அவர்கள் பிரிந்து சென்றிருப்பார்கள். ஆகவே, அவர்களை மன்னிப்பீராக! இன்னும், அவர்களுக்காக (அல்லாஹ்விடம்) மன்னிப்புத் தேடுவீராக! இன்னும், காரியங்களில் அவர்களுடன் ஆலோசிப்பீராக! ஆக, நீர் (ஒரு முடிவை) உறுதிசெய்தால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனை மட்டும் சார்ந்து இரு)ப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) நம்பிக்கை வை(த்து தன்னை சார்ந்து இரு)ப்பவர்கள் மீது அன்பு வைக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi159. (நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீர் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! மேலும், (யுத்தம், சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வருவீராக! (ஒரு விஷயத்தை செய்ய) நீர் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைப்பீராக. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கிறான்.