caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 125

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:125

بَلَىٰٓ إِن تَصْبِرُوا۟ وَتَتَّقُوا۟ وَيَأْتُوكُم مِّن فَوْرِهِمْ هَٰذَا يُمْدِدْكُمْ رَبُّكُم بِخَمْسَةِ ءَالَٰفٍ مِّنَ ٱلْمَلَٰٓئِكَةِ مُسَوِّمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆம். நீங்கள் பொறுத்தால், அல்லாஹ்வை அஞ்சினால், அவர்களுடைய இதே அவசரத்தில் (அவர்களும்) உங்களிடம் (போருக்கு) வந்தால், வானவர்களிலிருந்து (தங்களை) அடையாளமிடக்கூடிய ஐயாயிரத்தைக் கொண்டு இறைவன் உங்களுக்கு உதவுவான்.
Tamil Translation - Omar Sharifஆம், போதுமாகிவிடும். நீங்கள் பொறுமையாக இருந்தால்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால்; இன்னும், அவர்கள் இதே வேகத்தில் (-இதே நேரத்தில்) உங்களிடம் (போருக்கு) வந்தால், (தங்களைத் தாமே) அடையாளமிட்டுக்கொண்ட ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi125. நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து பொறுமையுடன் இருந்தால், இதே சமயத்தில் (எதிரிகள்) உங்கள் மீது அடர்ந்தேறிய போதிலும் (மூவாயிரம் என்ன?) அடையாள மிடப்பட்ட ஐயாயிரம் வானவர்களால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவிசெய்வான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70