caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 124

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:124

إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَن يَكْفِيَكُمْ أَن يُمِدَّكُمْ رَبُّكُم بِثَلَٰثَةِ ءَالَٰفٍ مِّنَ ٱلْمَلَٰٓئِكَةِ مُنزَلِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version"வானவர்களிலிருந்து இறக்கப்படும் மூவாயிரத்தைக் கொண்டு உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவது உங்களுக்குப் போதாதா?" என நம்பிக்கையாளர்களுக்கு நீர் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக!
Tamil Translation - Omar Sharif“(வானத்திலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவது உங்களுக்குப் போதுமாகாதா?’’ என நம்பிக்கையாளர்களுக்கு நீர் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi124. (நபியே! அப்பொழுது) நீர் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘(வானத்திலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?'' என்று கூறியதையும் நினைவு கூருவீராக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70