caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 123

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:123

وَلَقَدْ نَصَرَكُمُ ٱللَّهُ بِبَدْرٍ وَأَنتُمْ أَذِلَّةٌ فَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபத்ரில் நீங்கள் குறைந்தவர்களாக இருக்க, திட்டவட்டமாக அல்லாஹ் உங்களுக்கு உதவினான். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காக.
Tamil Translation - Omar Sharifபத்(ர் போ)ரில் நீங்கள் குறைவானவர்களாக இருந்த நிலையில், திட்டவட்டமாக அல்லாஹ் உங்களுக்கு உதவினான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi123. பத்ரில் (நடந்த போரில்) நீங்கள் (எதிரிகளைவிட ஆயுதத்திலும், தொகையிலும்) குறைந்தவர்களாக இருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவனுக்குப் பயந்து (வழிப்பட்டு) நடங்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70