caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 122

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:122

إِذْ هَمَّت طَّآئِفَتَانِ مِنكُمْ أَن تَفْشَلَا وَٱللَّهُ وَلِيُّهُمَا وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் இரு பிரிவினர் கோழையாகி பின்னடைய நாடிய சமயத்தை நினைவு கூறுவீராக! அல்லாஹ் அவ்விருவரின் பொறுப்பாளன். நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே (தவக்குல்) நம்பிக்கை வைப்பார்களாக!
Tamil Translation - Omar Sharifஉங்களில் இரு பிரிவினர் கோழைகளாகி (போரை விட்டு) விலகிவிட நாடிய சமயத்தை நினைவு கூர்வீராக! அல்லாஹ்வோ அவ்விருவரின் பொறுப்பாளன் ஆவான். இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே (தவக்குல்) நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்து இரு)ப்பார்களாக!
Tamil Translation - Abdulhamid Baqawi122. உங்களில் இரு பிரிவினர் தைரியமிழந்து (‘உஹுத்' என்னும் போர்க்களத்தை விட்டுச் சென்று) விட(லாமா என்று) இருந்தனர். அல்லாஹ் அவர்களின் உதவியாளன் (பாதுகாவலன்). (ஆகவே,) நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பார்களாக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70