فَإِذَا رَكِبُوا۟ فِى ٱلْفُلْكِ دَعَوُا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ فَلَمَّا نَجَّىٰهُمْ إِلَى ٱلْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கப்பலில் பயணித்தால் அல்லாஹ்வை அவனுக்கு மட்டும் வணக்க வழிபாட்டை தூய்மைப்படுத்தியவர்களாக அழைக்கின்றனர். அவன் அவர்களை கரைக்கு காப்பாற்றிக் கொண்டு வந்தால் அப்போது அவர்கள் (அவனுக்கு) இணைவைக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் கப்பலில் பயணித்தால் அல்லாஹ்வை - அவனுக்கு மட்டும் வணக்க வழிபாட்டை தூய்மைப்படுத்தியவர்களாக - அழைக்கிறார்கள். ஆக, அவன் அவர்களை கரைக்கு காப்பாற்றிக் கொண்டு வந்தால் அப்போது அவர்கள் (அவனுக்கு சிலைகளை) இணையாக்குகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi65. (மனிதர்கள்) கப்பலில் ஏறி (ஆபத்தில் சிக்கி)க் கொண்டால், அவர்கள் முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபட்டுக் கலப்பற்ற (பரிசுத்த) மனதோடு அவனை அழைத்துப் பிரார்த்தனை செய்கின்றனர். அவன், அவர்களை கரையில் (இறக்கி) பாதுகாத்துக் கொண்ட பின்னர் அவனுக்கு அவர்கள் (பலரை) இணை ஆக்குகின்றனர்.