وَقَالُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ ءَايَٰتٌ مِّن رَّبِّهِۦ قُلْ إِنَّمَا ٱلْـَٔايَٰتُ عِندَ ٱللَّهِ وَإِنَّمَآ أَنَا۠ نَذِيرٌ مُّبِينٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கூறினர்: “இவர் மீது அவரது இறைவனிடமிருந்து அத்தாட்சிகள் இறக்கப்பட வேண்டாமா!” (நபியே!) கூறுவீராக! அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடம் இருக்கின்றன. நானெல்லாம் தெளிவான எச்சரிப்பாளர்தான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் கூறினார்கள்: “இவர் மீது அவருடைய இறைவனிடமிருந்து அத்தாட்சிகள் இறக்கப்பட வேண்டாமா!” (நபியே!) கூறுவீராக! “அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடம் இருக்கின்றன. (அவன் நாடியபடி அத்தாட்சியை இறக்குவான்.) நானெல்லாம் தெளிவான எச்சரிப்பாளர்தான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi50. மேலும், (‘‘ தாங்கள் விரும்புகிறபடி) சில அத்தாட்சிகள் அவருடைய இறைவனால் அவருக்கு அளிக்கப்பட வேண்டாமா?'' என்று (இவ்வக்கிரமக்காரர்கள்) கூறுகின்றனர். அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘ அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கின்றன. (என்னிடமில்லை) நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன் மட்டும்தான்.''