caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ankaboot அத்தியாயம், வசனம் 24

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 85 · 29:24

فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِۦٓ إِلَّآ أَن قَالُوا۟ ٱقْتُلُوهُ أَوْ حَرِّقُوهُ فَأَنجَىٰهُ ٱللَّهُ مِنَ ٱلنَّارِ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَٰتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவருடைய மக்களின் பதில் இல்லை, அவரை கொல்லுங்கள் அல்லது அவரை எரித்து விடுங்கள் என்று கூறியே தவிர. ஆக, அல்லாஹ் அவரை நெருப்பிலிருந்து பாதுகாத்தான். நிச்சயமாக இதில் நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.
Tamil Translation - Omar Sharifஆக, (இப்ராஹீம் தமது மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தபோது) “அவரைக் கொல்லுங்கள்! அல்லது, அவரை எரித்து விடுங்கள்” என்றே தவிர அவருடைய மக்களின் பதில் இல்லை. ஆக, அல்லாஹ் அவரை நெருப்பிலிருந்து பாதுகாத்தான். நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
Tamil Translation - Abdulhamid Baqawi24. (இவ்வாறெல்லாம் இப்றாஹீம் நபி தன் மக்களுக்குக் கூறியதற்கு) ‘‘இவரை வெட்டி விடுங்கள்; அல்லது நெருப்பில் எரித்து விடுங்கள்'' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறு விதத்தில்) பதில் கூற அவருடைய மக்களால் முடியாது போயிற்று. (பின்னர் இப்றாஹீமை நெருப்பில் எறிந்தார்கள்.) ஆகவே, (அந்)நெருப்பிலிருந்து அல்லாஹ் அவரை காப்பாற்றினான். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70