وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَلِقَآئِهِۦٓ أُو۟لَٰٓئِكَ يَئِسُوا۟ مِن رَّحْمَتِى وَأُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் அத்தாட்சிகளையும் அவனது சந்திப்பையும் நிராகரிக்கின்றவர்கள் அவர்கள் எனது கருணையிலிருந்து நிராசை அடைந்து விட்டனர். அவர்கள் - வேதனை தரும் தண்டனை அவர்களுக்கு உண்டு.
Tamil Translation - Omar Sharifஇன்னும், எவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளையும் அவனது சந்திப்பையும் நிராகரிக்கிறார்களோ அவர்கள் எனது கருணையிலிருந்து நிராசை அடைந்து விடுவார்கள். இன்னும், கடுமையான வலிமிக்க தண்டனை அவர்களுக்கு நிச்சயம் உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi23. ‘‘ எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்து அவனைச் சந்திப்பதையும் மறுக்கின்றனரோ, அவர்கள் எனது அருளைப் பற்றி நம்பிக்கை இழந்து விடுவார்கள். அவர்களுக்கு நிச்சயமாகத் துன்புறுத்தும் வேதனையுண்டு.''