وَقَالَ إِنَّمَا ٱتَّخَذْتُم مِّن دُونِ ٱللَّهِ أَوْثَٰنًا مَّوَدَّةَ بَيْنِكُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ثُمَّ يَوْمَ ٱلْقِيَٰمَةِ يَكْفُرُ بَعْضُكُم بِبَعْضٍ وَيَلْعَنُ بَعْضُكُم بَعْضًا وَمَأْوَىٰكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن نَّٰصِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் (இப்ராஹீம்) கூறினார்: அல்லாஹ்வை அன்றி நீங்கள் சிலைகளை (வணங்குவதற்காக) எடுத்துக் கொண்டதெல்லாம் இவ்வுலக வாழ்வில் உங்களுக்கு மத்தியில் (சிலைகள் மீது நீங்கள் வைத்துள்ள) அன்பினால்தான். பிறகு, மறுமை நாளில் உங்களில் சிலர் சிலரை மறுத்து விடுவார்கள். உங்களில் சிலர் சிலரை சபிப்பார்கள். உங்கள் (அனைவரின்) தங்குமிடம் நரகம்தான். உங்களுக்கு உதவியாளர்கள் யாரும் இல்லை.
Tamil Translation - Omar Sharifஇன்னும் (இப்ராஹீம்) கூறினார்: அல்லாஹ்வை அன்றி நீங்கள் (வணங்குவதற்காக) சிலைகளை ஏற்படுத்தியதெல்லாம் இவ்வுலக வாழ்வில் உங்களுக்கு மத்தியில் (சிலைகள் மீது நீங்கள் வைத்துள்ள கண்மூடித்தனமான) அன்பினால்தான். பிறகு, மறுமை நாளில் உங்களில் சிலர் (-வணங்கப்பட்டவர்கள்) சிலரை (வணங்கியவர்களை) மறுத்து விடுவார்கள். இன்னும், உங்களில் சிலர் (-வழிகெட்டவர்கள்) சிலரை (-வழிகெடுத்தவர்களை) சபிப்பார்கள். இன்னும், உங்கள் (அனைவரின்) தங்குமிடம் நரகம்தான். உங்களுக்கு உதவியாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi25. (மேலும், இப்றாஹீம் அவர்களை நோக்கி) ‘‘ நீங்கள் அல்லாஹ்வை அன்றி இந்த சிலைகளைத் தெய்வமாக எடுத்துக் கொண்டதற்கெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் உங்களுக்கிடையில் (ஒருவருக்கு மற்றவருடன்) உள்ள சிநேக மனப்பான்மைதான் காரணமாகும். பின்னர், மறுமையிலோ உங்களில் ஒருவர் மற்றவரை நிராகரித்து விட்டு உங்களில் ஒருவர் மற்றவரை (நிந்தித்துச்) சபிப்பார். (முடிவில்) நீங்கள் அனைவரும் செல்லும் இடம் (நரகத்தின்) நெருப்புத்தான். அங்கு உங்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமிரார்'' என்று கூறினார்.