caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ankaboot அத்தியாயம், வசனம் 14

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 85 · 29:14

وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا خَمْسِينَ عَامًا فَأَخَذَهُمُ ٱلطُّوفَانُ وَهُمْ ظَٰلِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக நாம் நூஹை அவரது மக்களிடம் அனுப்பினோம். அவர் அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகள் (அவற்றில்) ஐம்பது ஆண்டுகள் தவிர தங்கி இருந்தார். இறுதியில் அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்க அவர்களை வெள்ளப்பிரளயம் பிடித்தது.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக நாம் நூஹை அவரது மக்களிடம் அனுப்பினோம். ஆக, அவர் அவர்களுடன் ஆயிரத்திற்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக தங்கி இருந்தார். ஆக, அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கும் நிலையில் அவர்களை வெள்ளப்பிரளயம் பிடித்தது.
Tamil Translation - Abdulhamid Baqawi14. நூஹ் நபியை நம் தூதராக அவருடைய மக்களிடம் நாம் அனுப்பி வைத்தோம். அவர் ஐம்பது குறைய ஓராயிரம் வருடங்கள் அவர்களிடையே இருந்தார். (இவ்வளவு காலமிருந்தும் அவரை அவருடைய மக்களில் சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இவ்வாறு) அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்ததனால் வெள்ளப் பிரளயம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70