caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ankaboot அத்தியாயம், வசனம் 13

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 85 · 29:13

وَلَيَحْمِلُنَّ أَثْقَالَهُمْ وَأَثْقَالًا مَّعَ أَثْقَالِهِمْ وَلَيُسْـَٔلُنَّ يَوْمَ ٱلْقِيَٰمَةِ عَمَّا كَانُوا۟ يَفْتَرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தங்கள் சுமைகளையும் இன்னும் தங்களது சுமைகளுடன் பல சுமைகளையும் நிச்சயம் சுமப்பார்கள். இன்னும் அவர்கள் பொய்யை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தது பற்றி மறுமை நாளில் நிச்சயம் விசாரிக்கப்படுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் தங்கள் சுமைகளையும் தங்களது சுமைகளுடன் (தங்களால் வழிகெடுக்கப்பட்டவர்களின்) சுமைகளையும் நிச்சயம் சுமப்பார்கள். இன்னும், அவர்கள் பொய்யை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தது பற்றி மறுமை நாளில் நிச்சயம் விசாரிக்கப்படுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi13. ஆயினும், அவர்கள் தங்கள் பாவச் சுமைகளையும் இன்னும் தங்கள் பாவச் சுமைகளுடன் (மனிதர்களை வழி கெடுத்த) பாவச்சுமைகளையும் நிச்சயமாக சுமப்பார்கள். மேலும், அவர்கள் இவ்வாறு பொய்யாகக் கற்பனை செய்து கூறிக்கொண்டிருந்ததைப் பற்றியும் நிச்சயமாக அவர்கள் மறுமை நாளில் கேட்கப்படுவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70