caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ankaboot அத்தியாயம், வசனம் 12

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 85 · 29:12

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّبِعُوا۟ سَبِيلَنَا وَلْنَحْمِلْ خَطَٰيَٰكُمْ وَمَا هُم بِحَٰمِلِينَ مِنْ خَطَٰيَٰهُم مِّن شَىْءٍ إِنَّهُمْ لَكَٰذِبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களை நோக்கி நிராகரித்தவர்கள் கூறினர்: “நீங்கள் எங்கள் பாதையை (மார்க்கத்தை) பின்பற்றுங்கள்! நாங்கள் உங்கள் தவறுகளை சுமந்து கொள்கிறோம்.” அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) அவர்களுடைய (நம்பிக்கையாளர்களுடைய) தவறுகளில் எதையும் சுமப்பவர்கள் அல்லர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களை நோக்கி, “நீங்கள் எங்கள் மார்க்கத்தை பின்பற்றுங்கள்! நாங்கள் உங்கள் தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறோம்” என்று நிராகரித்தவர்கள் கூறினார்கள். அவர்களுடைய (-நம்பிக்கையாளர்களுடைய) தவறுகளில் எதற்கும் அவர்கள் பொறுப்பேற்பவர்கள் அல்லர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. நிராகரிப்பவர்கள், நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘ நீங்கள் எங்கள் வழியைப் பின்பற்றுங்கள். (அதனால் ஏதும் குற்றங்குறைகள் ஏற்பட்டால்) உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்'' என்று கூறுகின்றனர். எனினும், அவர்களின் (நம்பிக்கையாளர்களின்) குற்றங்களிலிருந்து எதையுமே அவர்கள் (-நிராகரிப்பவர்கள்) சுமந்துகொள்ள மாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70