caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ankaboot அத்தியாயம், வசனம் 10

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 85 · 29:10

وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ فَإِذَآ أُوذِىَ فِى ٱللَّهِ جَعَلَ فِتْنَةَ ٱلنَّاسِ كَعَذَابِ ٱللَّهِ وَلَئِن جَآءَ نَصْرٌ مِّن رَّبِّكَ لَيَقُولُنَّ إِنَّا كُنَّا مَعَكُمْ أَوَلَيْسَ ٱللَّهُ بِأَعْلَمَ بِمَا فِى صُدُورِ ٱلْعَٰلَمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம் என்று கூறுகின்றவர் மக்களில் இருக்கின்றனர். அவர் அல்லாஹ்வின் விஷயத்தில் (-அவனை ஏற்றுக்கொண்டதற்காக) துன்புறுத்தப்பட்டால் மக்களுடைய சோதனையை அல்லாஹ்வின் தண்டனையைப் போன்று ஆக்கிவிடுகிறார். உமது இறைவனிடமிருந்து ஓர் உதவி வந்தால் நிச்சயமாக நாம் உங்களுடன் இருக்கின்றோம் என்று கூறுகின்றனர். அகிலத்தாரின் நெஞ்சங்களில் உள்ளவற்றை மிக அறிந்தவனாக அல்லாஹ் இல்லையா?
Tamil Translation - Omar Sharifஇன்னும், நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம் என்று கூறுபவர்களும் மக்களில் இருக்கிறார்கள். ஆக, அவர் அல்லாஹ்வின் விஷயத்தில் (-அவனை ஏற்றுக்கொண்டதற்காக) துன்புறுத்தப்பட்டால் மக்களுடைய சோதனையை அல்லாஹ்வின் தண்டனையைப் போன்று ஆக்கிவிடுகிறார். இன்னும், உமது இறைவனிடமிருந்து ஓர் உதவி வந்தால், “நிச்சயமாக நாம் உங்களுடன் இருக்கிறோம்” என்று கூறுகிறார்கள். அகிலத்தாரின் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா?
Tamil Translation - Abdulhamid Baqawi10. மனிதர்களில் சிலர் இருக்கின்றனர்: அவர்கள் ‘‘ நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறோம்'' என்று கூறுகின்றனர். எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வழியில் ஏதும் துன்பம் ஏற்பட்டால், மக்களால் ஏற்படும் அத்துன்பத்தை அல்லாஹ்வுடைய வேதனையைப் போல் (மிகப் பெரிதாக) ஆக்கி (உங்களிடமிருந்து விலகி)க் கொள்(ள விரும்பு)கின்றனர். உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஒரு உதவி கிடைத்தால் ‘‘ நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருந்தோம்'' என்று கூறுகின்றனர். உலகத்தாரின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இல்லையா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70