وَقَالَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ وَيْلَكُمْ ثَوَابُ ٱللَّهِ خَيْرٌ لِّمَنْ ءَامَنَ وَعَمِلَ صَٰلِحًا وَلَا يُلَقَّىٰهَآ إِلَّا ٱلصَّٰبِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகல்வி வழங்கப்பட்டவர்கள் கூறினர்: உங்களுக்கு நாசம் உண்டாகட்டும்! நம்பிக்கை கொண்டு நன்மை செய்பவருக்கு அல்லாஹ்வின் நற்கூலி மிகச் சிறந்ததாகும். இதற்கு (-இந்த வார்த்தையை கூறுவதற்கு) பொறுமையாளர்களைத் தவிர (மற்றவர்கள்) வாய்ப்பளிக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், கல்வி வழங்கப்பட்டவர்கள் கூறினார்கள்: “உங்களுக்கு நாசம் உண்டாகட்டும்! நம்பிக்கை கொண்டு நன்மை செய்பவருக்கு அல்லாஹ்வின் நற்கூலி மிகச் சிறந்ததாகும்.” இதற்கு (-இந்த வார்த்தையை கூறுவதற்கு) பொறுமையாளர்களைத் தவிர வாய்ப்பளிக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi80. எனினும், அவர்களில் எவர்களுக்கு மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டிருந்ததோ அவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘ உங்களுக்கு என்ன கேடு? (இவ்வாறு ஏன் கூறுகிறீர்கள்?) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கு (மறுமையில்) அல்லாஹ் கொடுக்கும் கூலியோ (இதை விட) எவ்வளவோ மேலானது. அதைப் பொறுமையாளர்களைத் தவிர (மற்ற எவரும்) அடைய மாட்டார்கள்'' என்று கூறினார்கள்.