وَقِيلَ ٱدْعُوا۟ شُرَكَآءَكُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيبُوا۟ لَهُمْ وَرَأَوُا۟ ٱلْعَذَابَ لَوْ أَنَّهُمْ كَانُوا۟ يَهْتَدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் (அவர்களுக்கு) சொல்லப்படும்: (நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கிய) “உங்கள் தெய்வங்களை அழையுங்கள்” என்று. அவர்கள் அவற்றை அழைப்பார்கள். ஆனால், அவர்களுக்கு அவை பதில் தரமாட்டா. இன்னும், தண்டனையை (கண்கூடாக)க் காண்பார்கள். நிச்சயமாக தாங்கள் நேர்வழி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டுமே! (என்று ஆசைப்படுவார்கள்!)
Tamil Translation - Omar Sharifஇன்னும், (இணைவைப்பாளர்களை நோக்கி) கூறப்படும்: “(நீங்கள் அல்லாஹ்விற்கு இணைவைத்து வணங்கிய) உங்கள் தெய்வங்களை அழையுங்கள்!” ஆக, அவர்கள் அவற்றை அழைப்பார்கள். ஆனால், அவர்களுக்கு அவை பதில் தரமாட்டா. இன்னும், (அவர்கள் எல்லோரும் தாங்கள் அடையப்போகும்) தண்டனையை (கண்கூடாக)க் காண்பார்கள். “நிச்சயமாக தாங்கள் நேர்வழி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டுமே!” (என்று அப்போது ஆசைப்படுவார்கள்!)
Tamil Translation - Abdulhamid Baqawi64. பின்னர், தங்கள் பொய்யான தெய்வங்களை (உதவிக்கு) அழைக்கும் படி அவர்களுக்குக் கூறப்பட்டு, அவ்வாறே அவர்கள் அவற்றையும் அழைப்பார்கள். எனினும், அவை இவர்களுக்கு (வாய் திறந்து) பதிலும் கொடுக்கா. (அதற்குள்ளாக) இவர்கள் தங்கள் வேதனையைக் கண்டு கொள்வார்கள். இவர்கள் நேரான வழியில் சென்றிருந்தால் (இக்கதிக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்...)