وَإِذَا سَمِعُوا۟ ٱللَّغْوَ أَعْرَضُوا۟ عَنْهُ وَقَالُوا۟ لَنَآ أَعْمَٰلُنَا وَلَكُمْ أَعْمَٰلُكُمْ سَلَٰمٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِى ٱلْجَٰهِلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் வீணானவற்றை செவிமடுத்தால் அதை புறக்கணித்து விடுவார்கள். எங்களுக்கு எங்கள் செயல்கள் (உடைய கூலி கிடைக்கும்). உங்களுக்கு உங்கள் செயல்கள் (உடைய கூலி கிடைக்கும்). உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். (நாங்கள் உங்களுக்கு தொந்தரவு தரமாட்டோம்.) அறியாதவர்களிடம் (பேசுவதையும் தர்க்கிப்பதையும்) நாங்கள் விரும்ப மாட்டோம். (எனவே, உங்களோடு தர்க்கம் செய்யமாட்டோம்) என்று கூறுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் வீணானவற்றை செவியுற்றால் அதை புறக்கணித்து (விலகி சென்று) விடுவார்கள்; எங்களுக்கு எங்கள் செயல்கள் (உடைய கூலி கிடைக்கும்); உங்களுக்கு உங்கள் செயல்கள் (உடைய கூலி கிடைக்கும்); உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்; (நாங்கள் உங்களுக்கு தொந்தரவு தரமாட்டோம்;) அறியாதவர்களிடம் (பேசுவதையும் தர்க்கிப்பதையும்) நாங்கள் விரும்ப மாட்டோம் என்று கூறுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi55. மேலும், அவர்கள் வீணான வார்த்தைகளைக் கேள்வியுற்றால் (அதில் சம்பந்தப்படாது) அதைப் புறக்கணித்து விட்டு ‘‘ எங்கள் காரியங்கள் எங்களுக்கும், உங்கள் காரியங்கள் உங்களுக்கும் (பெரியது). உங்களுக்கு ‘ஸலாம்.' அறியாதவர்களை (அவர்களிடம் தர்க்கிக்க) நாங்கள் விரும்புவதில்லை'' என்று கூறுவார்கள்.