caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 54

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:54

أُو۟لَٰٓئِكَ يُؤْتَوْنَ أَجْرَهُم مَّرَّتَيْنِ بِمَا صَبَرُوا۟ وَيَدْرَءُونَ بِٱلْحَسَنَةِ ٱلسَّيِّئَةَ وَمِمَّا رَزَقْنَٰهُمْ يُنفِقُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தங்கள் கூலியை இருமுறை வழங்கப்படுவார்கள் அவர்கள் (முந்திய வேதத்தை பின்பற்றி நடந்ததிலும் இந்தத் தூதரை பின்பற்றியதிலும்) பொறுமையாக (உறுதியாக) இருந்ததால். அவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் (முந்திய வேதத்தை பின்பற்றுவதிலும் இந்தத் தூதரை பின்பற்றுவதிலும் உறுதியுடன்) பொறுமையாக இருந்ததால் அவர்கள் தங்கள் (நற்) கூலியை இருமுறை வழங்கப்படுவார்கள். இன்னும், அவர்கள் நன்மையினால் தீமையைத் தடுப்பார்கள். இன்னும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi54. இவர்கள் உறுதியாக இருந்ததன் காரணத்தால், இரண்டு தடவைகள் அவர்களுக்கு (நற்)கூலி கொடுக்கப்படும். இவர்கள், தீய காரியங்களை நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவற்றில் இருந்து அவர்கள் தானமும் செய்வார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70