وَإِذَا يُتْلَىٰ عَلَيْهِمْ قَالُوٓا۟ ءَامَنَّا بِهِۦٓ إِنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّنَآ إِنَّا كُنَّا مِن قَبْلِهِۦ مُسْلِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் முன் (இந்த வேதம்) ஓதப்பட்டால் அவர்கள் கூறுவார்கள்: நாங்கள் இதை நம்பிக்கை கொண்டோம். நிச்சயமாக இது எங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மையான வேதம்தான். நிச்சயமாக நாங்கள் இதற்கு முன்னரும் (எங்கள் வேதத்தில் கூறப்பட்ட பிரகாரம் இறுதி நபியையும் இறுதி வேதத்தையும் நம்பிக்கை கொண்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்களுக்கு முன் (இந்த வேதம்) ஓதப்பட்டால் அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் இதை நம்பிக்கை கொண்டோம். நிச்சயமாக இது எங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மையான வேதம்தான். நிச்சயமாக நாங்கள் இதற்கு முன்னரும் (எங்கள் வேதத்தில் கூறப்பட்ட பிரகாரம் இறுதி நபியையும் இறுதி வேதத்தையும் நம்பிக்கை கொண்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi53. அவர்கள் மீது (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதற்கவர்கள் ‘‘ இதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். நிச்சயமாக இது எங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மை(யான வேதம்)தான். இதற்கு முன்னதாகவே நிச்சயமாக நாங்கள் இதை (எங்கள் வேதத்தின் மூலம் அறிந்து) ஏற்றுக் கொண்டிருக்கிறோம்'' என்று கூறுவார்கள்.