قَالَ سَنَشُدُّ عَضُدَكَ بِأَخِيكَ وَنَجْعَلُ لَكُمَا سُلْطَٰنًا فَلَا يَصِلُونَ إِلَيْكُمَا بِـَٔايَٰتِنَآ أَنتُمَا وَمَنِ ٱتَّبَعَكُمَا ٱلْغَٰلِبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் (-அல்லாஹ்) கூறினான்: உமது புஜத்தை உமது சகோதரரைக் கொண்டு பலப்படுத்துவோம். உம் இருவருக்கும் ஓர் அத்தாட்சியை ஆக்குவோம். ஆகவே, அவர்கள் உங்கள் இருவர் பக்கம் (எந்த தீங்கையும் கொண்டு) வரமுடியாது. நீங்கள் இருவரும் உங்களை பின்பற்றியவர்களும் தான் நமது அத்தாட்சிகளைக் கொண்டு (ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தையும்) மிகைத்தவர்கள்.
Tamil Translation - Omar Sharif(அல்லாஹ்) கூறினான்: “உமது சகோதரரை (உம்முடன் நபியாக அனுப்புவது) கொண்டு உமது புஜத்தை பலப்படுத்துவோம். இன்னும், உம் இருவருக்கும் ஓர் அத்தாட்சியை ஆக்குவோம். ஆகவே, அவர்கள் உங்கள் இருவர் பக்கம் (எந்த தீங்கையும்) சேர்ப்பிக்க முடியாது. நீங்கள் இருவரும் உங்களை பின்பற்றியவர்களும்தான் நமது அத்தாட்சிகளைக் கொண்டு (ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தையும்) மிகைத்தவர்கள் ஆவீர்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi35. அதற்கு இறைவன் ‘‘ உமது சகோதரரைக் கொண்டு உமது தோள்களை நாம் வலுப்படுத்துவோம். நாம் உங்களுக்கு வெற்றியையும் தருவோம். ஆகவே அவர்கள் உங்களை நெருங்கவும் முடியாது. நீங்கள் நமது (இந்த)அத்தாட்சிகளுடன் (தயக்கமின்றிச் செல்லுங்கள்.) நீங்களும் உங்கள் இருவரைப் பின்பற்றியவர்களும்தான் வெற்றி பெறுவீர்கள்'' என்று கூறினான்.