وَأَخِى هَٰرُونُ هُوَ أَفْصَحُ مِنِّى لِسَانًا فَأَرْسِلْهُ مَعِىَ رِدْءًا يُصَدِّقُنِىٓ إِنِّىٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“எனது சகோதரர் ஹாரூன் அவர் என்னைவிட தெளிவான நாவன்மை உடையவர். ஆகவே, அவரை என்னுடன் உதவியாக அனுப்பு! அவர் என்னை உண்மைப்படுத்துவார். நிச்சயமாக நான் அவர்கள் என்னை பொய்ப்பிப்பதைப் பயப்படுகிறேன்.”
Tamil Translation - Omar Sharifஇன்னும், “எனது சகோதரர் ஹாரூன் இருக்கிறார். அவர் என்னைவிட தெளிவான நாவன்மை உடையவர். ஆகவே, அவரை என்னுடன் உதவியாளராக அனுப்பு! அவர் என்னை உண்மைப்படுத்துவார். நிச்சயமாக நான் - அவர்கள் என்னை பொய்ப்பிப்பார்கள் என்று - பயப்படுகிறேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi34. என் சகோதரர் ஹாரூனோ என்னைவிட தெளிவாகப் பேசக்கூடியவர். அவரை நீ எனக்கு உதவியாக என்னுடன் அனுப்பிவை. அவர் என்னை உண்மைப்படுத்தி வைப்பார். (நான் தனியே சென்றால்) அவர்கள் என்னைப் பொய்யாக்கி விடுவார்கள் என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்.