caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 36

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:36

فَلَمَّا جَآءَهُم مُّوسَىٰ بِـَٔايَٰتِنَا بَيِّنَٰتٍ قَالُوا۟ مَا هَٰذَآ إِلَّا سِحْرٌ مُّفْتَرًى وَمَا سَمِعْنَا بِهَٰذَا فِىٓ ءَابَآئِنَا ٱلْأَوَّلِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, நமது தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் மூஸா வந்தபோது அவர்கள் கூறினர்: “இது (நீர்) இட்டுக்கட்டப்பட்ட சூனியமே தவிர (வேறு) இல்லை. எங்கள் முந்திய மூதாதைகளில் இதைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதில்லை.
Tamil Translation - Omar Sharifஆக, நமது தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் மூஸா வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “இது (உம்மால்) இட்டுக்கட்டப்பட்ட சூனியமே தவிர இல்லை. இன்னும், எங்கள் முந்திய மூதாதைகளில் இதைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதில்லை.”
Tamil Translation - Abdulhamid Baqawi36. நம் தெளிவான அத்தாட்சிகளுடன் மூஸா அவர்களிடம் வந்தபொழுது அவர்கள் ‘‘இது கற்பனை செய்யப்பட்ட சூனியத்தைத் தவிர வேறில்லை. முன்னிருந்த எங்கள் மூதாதைகளிடத்திலும் இத்தகைய விஷயத்தை நாம் கேள்விப்படவில்லை'' என்று கூறினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70