caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naml அத்தியாயம், வசனம் 92

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 48 · 27:92

وَأَنْ أَتْلُوَا۟ ٱلْقُرْءَانَ فَمَنِ ٱهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِى لِنَفْسِهِۦ وَمَن ضَلَّ فَقُلْ إِنَّمَآ أَنَا۠ مِنَ ٱلْمُنذِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், (இந்த) குர்ஆனை நான் ஓதுவதற்கும்(கட்டளை இடப்பட்டுள்ளேன்). ஆகவே, யார் நேர்வழி பெறுகிறாரோ அவர் நேர்வழி பெறுவதெல்லாம் அவரது நன்மைக்காகத்தான். யார் வழி கெடுகின்றானோ (அவனுக்கு நபியே நீர் உம்மைப் பற்றி) கூறுவீராக! “நான் எல்லாம் எச்சரிப்பவர்களில் உள்ளவன் தான். (நான் எச்சரித்து விட்டேன். நீங்கள் என்னை பின்பற்றினால் நீங்கள் அடையப்போகும் நன்மை உங்களுக்குத்தான். நீங்கள் என்னை நிராகரித்தால் அதனால் ஏற்படும் தீமை உங்களுக்குத்தான்.)”
Tamil Translation - Omar Sharifஇன்னும், (இந்த) குர்ஆனை நான் (மக்களுக்கு முன்) ஓதுவதற்கும் (கட்டளை இடப்பட்டுள்ளேன்). ஆகவே, யார் (அந்த குர்ஆன் மூலம்) நேர்வழி பெறுகிறாரோ அவர் நேர்வழி பெறுவதெல்லாம் அவரது நன்மைக்காகத்தான். யார் வழி கெடுகிறானோ (அவனுக்கு நபியே நீர் உம்மைப் பற்றி) கூறுவீராக! “நான் எல்லாம் எச்சரிப்பவர்களில் உள்ளவன்தான். (நான் எச்சரித்து விட்டேன். நீங்கள் என்னை பின்பற்றினால் நீங்கள் அடையப்போகும் நன்மை உங்களுக்குத்தான். நீங்கள் என்னை நிராகரித்தால் அதனால் ஏற்படும் தீமை உங்களுக்குத்தான்.)”
Tamil Translation - Abdulhamid Baqawi92. மேலும், திரு குர்ஆனை நான் (அனைவருக்கும்) ஓதிக் காண்பிக்குமாறும் (ஏவப்பட்டுள்ளேன்). (அதைக் கொண்டு) எவன் நேரான வழியை அடைகிறானோ அவன் தன் சுய நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவரேனும் (இதிலிருந்து விலகித்) தவறான வழியில் சென்றால் (நபியே! நீர் அதைப் பற்றிக் கவலைப்படாதீர்.) ‘‘ நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிப்பவர்களில் ஒருவன்தான் (நிர்ப்பந்திப்பவனல்ல)'' என்று கூறுவீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70