إِنَّمَآ أُمِرْتُ أَنْ أَعْبُدَ رَبَّ هَٰذِهِ ٱلْبَلْدَةِ ٱلَّذِى حَرَّمَهَا وَلَهُۥ كُلُّ شَىْءٍ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ ٱلْمُسْلِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே கூறுவீராக!) நான் கட்டளை இடப்பட்டதெல்லாம் இந்த ஊரின் இறைவனை வணங்குவதற்குத்தான். அவன் அதை புனிதப்படுத்தியுள்ளான். அவனுக்குத்தான் எல்லாப் பொருள்களும் உரிமையானவை. இன்னும், முஸ்லிம்களில் (-அவனுக்கு முற்றிலும் பணிந்து, நபி இப்ராஹீமுடைய மார்க்கத்தை பின்பற்றியவர்களில்) நான் ஆகவேண்டும் என்று கட்டளை இடப்பட்டுள்ளேன்.
Tamil Translation - Omar Sharif(நபியே கூறுவீராக!) நான் கட்டளை இடப்பட்டதெல்லாம், இந்த ஊரின் இறைவனை வணங்குவதற்குத்தான். அவன் அதை புனிதப்படுத்தியுள்ளான். இன்னும், அவனுக்குத்தான் எல்லாப் பொருள்களும் உரிமையானவையாகும். இன்னும், நான் (அவனுக்கு முற்றிலும் பணிந்து, நபி இப்ராஹீமுடைய மார்க்கத்தை பின்பற்றுகிற) முஸ்லிம்களில் ஆகவேண்டும் என்று கட்டளை இடப்பட்டுள்ளேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi91. (நபியே! நீர் கூறுவீராக!) இந்த (மக்கா) நகரத்தின் அதிபதியாகிய இறைவன் ஒருவனையே வணங்குமாறு நான் ஏவப்பட்டு உள்ளேன். அவன்தான் இதை மிக்க கண்ணியப்படுத்தியுள்ளான் எல்லாப் பொருள்களும் அவனுக்கு உரியனவே! மேலும், அவனுக்கே முற்றிலும் வழிபட்டவர்களில் நான் இருக்கும்படி நான் ஏவப்பட்டுள்ளேன்.