caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naml அத்தியாயம், வசனம் 81

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 48 · 27:81

وَمَآ أَنتَ بِهَٰدِى ٱلْعُمْىِ عَن ضَلَٰلَتِهِمْ إِن تُسْمِعُ إِلَّا مَن يُؤْمِنُ بِـَٔايَٰتِنَا فَهُم مُّسْلِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லாஹ் எவர்களின் கண்களை சத்தியத்தை பார்ப்பதிலிருந்து குருடாக்கி விட்டானோ அந்த) குருடர்களை அவர்களின் வழிகேட்டிலிருந்து நீர் நேர்வழிபடுத்த முடியாது. நமது வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களைத் தவிர (பிறரை) நீர் செவியுறச் செய்யமுடியாது. அவர்கள்தான் (நமது கட்டளைகளுக்கு) முற்றிலும் பணிந்து நடப்பவர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (அல்லாஹ் எவர்களின் கண்களை சத்தியத்தை பார்ப்பதிலிருந்து குருடாக்கி விட்டானோ அந்த) குருடர்களை அவர்களின் வழிகேட்டிலிருந்து நீர் நேர்வழிபடுத்த முடியாது. நமது வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களைத் தவிர (பிறரை) நீர் செவியுறச் செய்ய முடியாது. அவர்கள்தான் (நமது கட்டளைகளுக்கு முற்றிலும் பணிந்து நடக்கின்ற) முஸ்லிம்கள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi81. குருடர்களை, அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேரான வழிக்குக் கொண்டுவரவும் உம்மால் முடியாது. எவர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொண்டு முற்றிலும் நமக்கு பணிந்து நடக்கிறார்களோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு நீர் (நம் வசனங்களைக்) கேட்க வைக்க முடியாது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70