caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naml அத்தியாயம், வசனம் 80

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 48 · 27:80

إِنَّكَ لَا تُسْمِعُ ٱلْمَوْتَىٰ وَلَا تُسْمِعُ ٱلصُّمَّ ٱلدُّعَآءَ إِذَا وَلَّوْا۟ مُدْبِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக (உள்ளம்) மரணித்தவர்களை நீர் செவியுறச் செய்யமுடியாது. (செவியில் முத்திரை இடப்பட்ட) செவிடர்களுக்கும் -அவர்கள் புறமுதுகிட்டவர்களாக (-புறக்கணித்தவர்களாக) திரும்பினால்- அழைப்பை நீர் செவியுறச் செய்யமுடியாது.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக (உள்ளம்) மரணித்தவர்களை நீர் செவியுறச் செய்யமுடியாது. (செவியில் முத்திரை இடப்பட்ட) செவிடர்களுக்கும் - அவர்கள் புறமுதுகிட்டவர்களாக (-புறக்கணித்தவர்களாக) திரும்பினால் - (இந்த ஏகத்துவ) அழைப்பை நீர் செவியுறச் செய்யமுடியாது.
Tamil Translation - Abdulhamid Baqawi80. (நபியே!) மரணித்தவர்களை கேட்கவைக்க நிச்சயமாக உம்மால் முடியாது. (அவ்வாறே உமக்குப்) புறங்காட்டிச் செல்லும் செவிடர்களை, (நீர்) அழைக்கும் (உமது) சப்தத்தைக் கேட்க வைக்கவும் உம்மால் முடியாது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70