أَمَّن يَبْدَؤُا۟ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥ وَمَن يَرْزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ أَءِلَٰهٌ مَّعَ ٱللَّهِ قُلْ هَاتُوا۟ بُرْهَٰنَكُمْ إِن كُنتُمْ صَٰدِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லது) படைப்புகளை எவன் முதலில் உருவாக்கி, (பின்னர் அவை அழிந்த) பிறகு அவற்றை மீண்டும் உருவாக்குகின்றானோ, மேகத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு எவன் உணவளிக்கின்றானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! (நபியே!) கூறுவீராக: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்!
Tamil Translation - Omar Sharifஅல்லது, எவன் படைப்புகளை முதலில் உருவாக்கி, (பின்னர் அவை அழிந்த) பிறகு அவற்றை மீண்டும் உருவாக்குகிறானோ, இன்னும் மேகத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு எவன் உணவளிக்கிறானோ அவன் சிறந்தவனா? (அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவை சிறந்தவையா? இத்தகைய) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! (நபியே!) கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் (வழிபாடுகளுக்கு) ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்!”
Tamil Translation - Abdulhamid Baqawi64. ஆரம்பத்தில் படைப்புகளை உற்பத்தி செய்தவன் யார்? (அவ்வாறே பின்னும்) பின்னும் உற்பத்தி செய்து கொண்டிருப்பவன் யார்? மேகத்தில் இருந்து (மழையை இறக்கியும்) பூமியில் இருந்து (தானியங்களை முளைக்கச் செய்தும்) உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? ‘‘ நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இதற்கு) உங்கள் அத்தாட்சிகளைக் கொண்டுவாருங்கள்'' என்று (நபியே!) கூறுவீராக.