فَأَنجَيْنَٰهُ وَأَهْلَهُۥٓ إِلَّا ٱمْرَأَتَهُۥ قَدَّرْنَٰهَا مِنَ ٱلْغَٰبِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் அவரையும் அவருடைய குடும்பத்தையும் -அவருடைய பிள்ளைகள், மனைவியைத் தவிர-பாதுகாத்தோம். அவளை நாம், (ஊரில்) மிஞ்சியவர்களில் (இருக்க வைத்து தண்டனையில் அழிக்கப்பட) முடிவு செய்தோம்.
Tamil Translation - Omar Sharifஆக, அவருடைய மனைவியைத் தவிர நாம் அவரையும் அவருடைய குடும்பத்தையும் பாதுகாத்தோம். (ஊரில்) மிஞ்சி இருப்பவர்களில் அவளை (இருக்க வைத்து நமது தண்டனை இறங்கும்போது அவள் அழிக்கப்படவேண்டும் என்று) முடிவு செய்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi57. ஆகவே, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம். எனினும், அவருடைய மனைவியைத் தவிர. ஏனென்றால், அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிட வேண்டுமென்று (ஏற்கனவே) தீர்மானித்து விட்டோம்.