قِيلَ لَهَا ٱدْخُلِى ٱلصَّرْحَ فَلَمَّا رَأَتْهُ حَسِبَتْهُ لُجَّةً وَكَشَفَتْ عَن سَاقَيْهَا قَالَ إِنَّهُۥ صَرْحٌ مُّمَرَّدٌ مِّن قَوَارِيرَ قَالَتْ رَبِّ إِنِّى ظَلَمْتُ نَفْسِى وَأَسْلَمْتُ مَعَ سُلَيْمَٰنَ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவளுக்கு கூறப்பட்டது: “நீ மாளிகையில் நுழை!” அவள் அதைப் பார்த்த போது அதை அலை அடிக்கும் நீராகக் கருதி, தன் இரு கெண்டைக் கால்களை விட்டும் (தன் ஆடையை) அகற்றினாள். (அப்போது ஸுலைமான்) கூறினார்: நிச்சயமாக இது கண்ணாடிகளால் சமப்படுத்தப்பட்ட மாளிகை(யின் தரை)யாகும்.அவள், கூறினாள்: என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கே அநீதி செய்து கொண்டேன். இன்னும், அகிலங்களின் இறைவனான அல்லாஹ்விற்கு ஸுலைமானுடன் நானும் முஸ்லிமாகி விட்டேன்.
Tamil Translation - Omar Sharif“நீ மாளிகையில் நுழை!” என்று அவளுக்கு கூறப்பட்டது. அவள் அதைப் பார்த்தபோது அதை அலை அடிக்கும் நீராகக் கருதி, தன் இரு கெண்டைக் கால்களை விட்டும் (தன் ஆடையை) அகற்றினாள். (அப்போது சுலைமான்) கூறினார்: “நிச்சயமாக இது (-இந்த மாளிகையின் தரை) கண்ணாடிகளால் சமப்படுத்தப்பட்ட (மொழுவப்பட்ட, உருவாக்கப்பட்ட) மாளிகை(யின் தரை)யாகும்.” அவள், கூறினாள்: “என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கே அநீதி செய்து கொண்டேன். இன்னும், அகிலங்களின் இறைவனான அல்லாஹ்விற்கு சுலைமானுடன் சேர்ந்து நானும் (பணிந்து) முஸ்லிமாகி விட்டேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi44. பின்னர் ‘‘ இம்மாளிகையில் நுழை'' என்று அவளுக்குக் கூறப்பட்டது. அவள் அதைக் கண்டு (அதன் தரையில் பதிக்கப்பட்டிருந்த பளிங்கு கற்களை) தண்ணீர் என்று எண்ணி ஆடையை (அது நனைந்து போகாதிருக்க) இரு கெண்டைக்கால்களில் இருந்து உயர்த்தினாள். அதற்கு (ஸுலைமான்) ‘‘ நிச்சயமாக அது (தண்ணீரல்ல) பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட மாளிகைதான்'' என்று கூறினார். அதற்கவள் ‘‘ என் இறைவனே! நிச்சயமாக நானே எனக்குத் தீங்கிழைத்துக் கொண்டிருந்தேன். உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு ஸுலைமானுடன் நானும் முற்றிலும் கட்டுப்படுகிறேன்'' என்று கூறினாள்.