فَلَمَّا جَآءَتْ قِيلَ أَهَٰكَذَا عَرْشُكِ قَالَتْ كَأَنَّهُۥ هُوَ وَأُوتِينَا ٱلْعِلْمَ مِن قَبْلِهَا وَكُنَّا مُسْلِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவள் வந்தபோது, “இது போன்றா உனது அரச கட்டில்?” என்று கேட்கப்பட்டது. அவள் கூறினாள்: “இது அதைப் போன்றுதான்.” இவளுக்கு முன்னரே நாம் (அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய ஆற்றலைப் பற்றியும்) அறிவு கொடுக்கப்பட்டோம். இன்னும், முஸ்லிம்களாக இருக்கிறோம்.
Tamil Translation - Omar Sharifஆக, அவள் வந்தபோது, “இது உனது அரச கட்டில் போன்றா இருக்கிறது?” என்று கேட்கப்பட்டது. அவள் கூறினாள்: “இது அதைப் போன்றுதான் இருக்கிறது.” (பின்னர் சுலைமான் கூறினார்:) இவளுக்கு முன்னரே நாம் (அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய ஆற்றலைப் பற்றியும்) அறிவு கொடுக்கப்பட்டு இருக்கிறோம். இன்னும், நாம் முஸ்லிம்களாக (அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தவர்களாக) இருக்கிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi42. அவள் வந்து சேரவே (அவளை நோக்கி) ‘‘ உனது அரச கட்டில் இவ்வாறுதானா இருக்கும்?'' என்று கேட்கப்பட்டதற்கு அவள் ‘‘ இது முற்றிலும் அதைப் போலவே இருக்கிறது. இதற்கு முன்னதாகவே (உமது மேன்மையைப் பற்றிய) விஷயம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது. நாங்கள் முற்றிலும் கட்டுப்பட்டே வந்திருக்கிறோம்'' என்றாள்.