إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ زَيَّنَّا لَهُمْ أَعْمَٰلَهُمْ فَهُمْ يَعْمَهُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள் -அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அலங்கரித்து விட்டோம். ஆகவே, அவர்கள் (தங்கள் தீமைகளில்) தறிகெட்டு அலைகிறார்கள்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களுக்கு நாம் அவர்களுடைய (தீய) செயல்களை (நல்ல செயல்களாக) அலங்கரித்து விட்டோம். ஆகவே, அவர்கள் (தங்கள் தீமைகளில்) தறிகெட்டு அலைகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. நிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுக்கு (அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக) நாம் அவர்களுடைய (தீய) காரியங்களை அழகாக்கி விட்டோம். ஆகவே, அவர்கள் அதில் சீர்கெட்டு தட்டழிந்து திரிகின்றனர்.