caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naml அத்தியாயம், வசனம் 24

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 48 · 27:24

وَجَدتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُونَ لِلشَّمْسِ مِن دُونِ ٱللَّهِ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَٰنُ أَعْمَٰلَهُمْ فَصَدَّهُمْ عَنِ ٱلسَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவளையும் அவளுடைய மக்களையும் அல்லாஹ்வை அன்றி சூரியனுக்கு சிரம் பணிந்து வணங்குகின்றவர்களாக கண்டேன். ஷைத்தான் அவர்களுக்கு அவர்களின் (இந்த இணைவைப்பு) செயல்களை அலங்கரித்து விட்டான். ஆகவே, அவர்களை (நேரான) பாதையிலிருந்து அவன் தடுத்து விட்டான். ஆகவே, அவர்கள் நேர்வழி பெறவில்லை.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவளையும் அவளுடைய மக்களையும் - அவர்கள் அல்லாஹ்வை அன்றி சூரியனுக்கு சிரம் பணிந்து வணங்குபவர்களாக - கண்டேன். ஷைத்தான் அவர்களுக்கு அவர்களின் (தீய) செயல்களை அலங்கரித்து விட்டான். ஆக, அவர்களை (நேரான) பாதையிலிருந்து அவன் தடுத்து விட்டான். ஆக, (அல்லாஹ்வின் பக்கம்) அவர்கள் நேர்வழி பெறாமல் இருக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi24. அவளும் அவளுடைய மக்களும் அல்லாஹ்வையன்றி சூரியனைச் சிரம் பணிந்து வணங்குவதை நான் கண்டேன். அவர்களுடைய இக்காரியத்தை ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விட்டான். ஆதலால், அவர்கள் நேரான வழியை அடையவில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70