إِنِّى وَجَدتُّ ٱمْرَأَةً تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِن كُلِّ شَىْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நான் (அங்கு) ஒரு பெண்ணை, அவள் அவர்களை (-அந்நாட்டு மக்களை) ஆட்சி செய்கின்றவளாகக் கண்டேன். (ஆட்சிக்கு தேவையான) எல்லாம் அவள் வழங்கப்பட்டு இருக்கிறாள். அவளுக்கு சொந்தமான ஒரு பெரிய (-விலை உயர்ந்த, மதிக்கத்தக்க) அரச கட்டிலும் உள்ளது.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நான் (அங்கு) ஒரு பெண், அவர்களை ஆட்சி செய்வதைக் கண்டேன். இன்னும், (ஆட்சிக்கு தேவையான) பொருள்கள் எல்லாம் அவள் வழங்கப்பட்டு இருக்கிறாள். இன்னும், அவளுக்கு சொந்தமான ஒரு பெரிய (-விலை உயர்ந்த) அரச கட்டிலும் உள்ளது.
Tamil Translation - Abdulhamid Baqawi23. மெய்யாகவே அந்நாட்டு மக்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன். எல்லா வசதிகளும் அவள் பெற்றிருக்கிறாள். மகத்தானதொரு அரசகட்டிலும் அவளுக்கு இருக்கிறது.