أَلَّا يَسْجُدُوا۟ لِلَّهِ ٱلَّذِى يُخْرِجُ ٱلْخَبْءَ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை (-மழை மற்றும் தாவரங்களை) வெளிப்படுத்துகின்ற, இன்னும் நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அறிகின்ற அல்லாஹ்விற்கு அவர்கள் சிரம் பணியாமல் இருப்பதற்காக (அவன் அவர்களது ஷிர்க்கான செயல்களை அலங்கரித்துக் காட்டினான்).
Tamil Translation - Omar Sharifவானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை (-மழை மற்றும் தாவரங்களை) வெளிப்படுத்துகின்றவனும்; இன்னும், நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அறிகின்றவனுமாகிய அல்லாஹ்விற்கு அவர்கள் சிரம் பணியாமல் இருப்பதற்காக (அவன் அவர்களது கெட்ட செயல்களை அலங்கரித்துக் காட்டினான்).
Tamil Translation - Abdulhamid Baqawi25. வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தக்கூடிய, நீங்கள் மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் நன்கறியக் கூடிய அல்லாஹ்வுக்கு அவர்கள் சிரம் பணிந்து வணங்க வேண்டாமா?