فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِۦ وَجِئْتُكَ مِن سَبَإٍۭ بِنَبَإٍ يَقِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் (ஹுத்ஹுதைப் பற்றி விசாரித்து விட்டு) சிறிது நேரம்தான் தாமதித்தார். (ஹுத்ஹுத் அவர் முன் வந்துவிட்டது. பின்னர்) அது கூறியது: ஆக, நீர் அறியாததை நான் அறிந்துள்ளேன். உம்மிடம் ‘ஸபா’ இனத்தாரிடமிருந்து உறுதியான செய்தியைக் கொண்டு வந்துள்ளேன்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர் (ஹுத்ஹுதைப் பற்றி விசாரித்த பின்னர்) சிறிது நேரம்தான் தாமதித்தார். (அதற்குள் ஹுத்ஹுத் அவர் முன் வந்துவிட்டது.) ஆக, அது கூறியது: “(ஸுலைமானே!) நீர் அறியாததை நான் அறிந்து (வந்து)ள்ளேன். இன்னும், ‘சபா’ நாட்டவர்களிடமிருந்து உறுதியான செய்தியை உம்மிடம் கொண்டு வந்திருக்கிறேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. (இவ்வாறு கூறி) அதிக நேரமாகவில்லை. (அதற்குள் ஹுத்ஹுத் பறவை அவர் முன் தோன்றி) ‘‘ நீர் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டு ‘ஸபா'வைப் பற்றி நிச்சயமான (உண்மைச்) செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.