caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naml அத்தியாயம், வசனம் 19

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 48 · 27:19

فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ ٱلَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلَىٰ وَٰلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صَٰلِحًا تَرْضَىٰهُ وَأَدْخِلْنِى بِرَحْمَتِكَ فِى عِبَادِكَ ٱلصَّٰلِحِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, அதன் பேச்சினால் அவர் சிரித்தவராக புன்முறுவல் பூத்தார். இன்னும் கூறினார்: “என் இறைவா! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் அருள்புரிந்த உன் அருளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும் நீ மகிழ்ச்சியுறுகின்ற நல்லதை நான் செய்வதற்கும் எனக்கு நீ அகத்தூண்டுதலை (-உள்ளத்தில் உதிப்பை) ஏற்படுத்து! (மனதில் அதற்குண்டான ஆசையையும் உணர்வையும் ஏற்படுத்து.) உன் கருணையால் உன் நல்லடியார்களில் என்னை நுழைத்துவிடு!”
Tamil Translation - Omar Sharifஆக, அதன் பேச்சினால் அவர் சிரித்தவராக புன்முறுவல் பூத்தார். இன்னும் கூறினார்: “என் இறைவா! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் அருள்புரிந்த உன் அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும் நீ எந்த நல்லதைக் கொண்டு திருப்தி அடைவாயோ அதை நான் செய்வதற்கும் எனக்கு நீ உள்ளத்தில் உதிப்பை ஏற்படுத்து! (மனதில் அதற்குண்டான ஆசையையும் உணர்வையும் ஏற்படுத்து!) இன்னும், உன் கருணையால் உன் நல்லடியார்களில் என்னை நுழைத்துவிடு!”
Tamil Translation - Abdulhamid Baqawi19. அதன் சொல்லைக் கேள்வியுற்று ஸுலைமான் சிரித்தவராக புன்னகைப் பூத்தார். மேலும், ‘‘ என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த உன் அருள்களுக்கு உனக்கு நான் நன்றி செலுத்த நீ எனக்கு அருள் புரிவாயாக! உனக்குத் திருப்தியளிக்கக்கூடிய நற்செயல்களையும் நான் செய்ய(க்கூடிய பாக்கியத்தை எனக்கு) அருள் புரிந்து, உன் கருணையைக் கொண்டு உன் நல்லடியார்களுடனும் என்னைச் சேர்த்து விடுவாயாக!'' என்று பிரார்த்தனை செய்தார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70