caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naml அத்தியாயம், வசனம் 18

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 48 · 27:18

حَتَّىٰٓ إِذَآ أَتَوْا۟ عَلَىٰ وَادِ ٱلنَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَٰٓأَيُّهَا ٱلنَّمْلُ ٱدْخُلُوا۟ مَسَٰكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَٰنُ وَجُنُودُهُۥ وَهُمْ لَا يَشْعُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇறுதியாக, (ஒரு முறை) எறும்புகளின் ஒரு பள்ளத்தாக்கில் அவர்கள் வந்த போது ஓர் எறும்பு கூறியது: எறும்புகளே! உங்கள் பொந்துகளுக்குள் நுழைந்து விடுங்கள்! ஸுலைமானும் அவருடைய ராணுவங்களும் உங்களை மிதித்து அழித்து விடவேண்டாம். அவர்களோ (நீங்கள் இருப்பதையும் அவர்கள் உங்களை மிதிப்பதையும்) உணர மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇறுதியாக, (ஒரு பயணத்தில்) எறும்புகளின் ஒரு பள்ளத்தாக்கில் அவர்கள் வந்தபோது ஓர் எறும்பு கூறியது: எறும்புகளே! உங்கள் பொந்துகளுக்குள் நுழைந்து விடுங்கள்! சுலைமானும் அவருடைய இராணுவங்களும் உங்களை (மிதித்து) அழித்து விடவேண்டாம். அவர்களோ (நீங்கள் கீழே இருப்பதையும் அவர்கள் உங்களை மிதிப்பதையும்) உணர மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi18. அவை எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் சமீபமாக வந்தபொழுது அதிலொரு பெண் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) ‘‘எறும்புகளே! நீங்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய ராணுவமும் (நீங்கள் இருப்பதை) அறியாது உங்களை(த் தங்கள் கால்களால்) மிதித்துவிடாமல் இருக்கட்டும்'' என்று கூறியது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70