caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naml அத்தியாயம், வசனம் 12

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 48 · 27:12

وَأَدْخِلْ يَدَكَ فِى جَيْبِكَ تَخْرُجْ بَيْضَآءَ مِنْ غَيْرِ سُوٓءٍ فِى تِسْعِ ءَايَٰتٍ إِلَىٰ فِرْعَوْنَ وَقَوْمِهِۦٓ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًا فَٰسِقِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது கரத்தை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்வித குறையுமின்றி மின்னும் வெண்மையாக - ஃபிர்அவ்னுக்கும் அவனது மக்களுக்கும் நீர் அனுப்பப்பட்ட ஒன்பது அத்தாட்சிகளில் ஒன்றாக - வெளிவரும். நிச்சயமாக அவர்கள் (இறைவனை நிராகரித்த) பாவிகளான மக்களாக இருக்கிறார்கள்.
Tamil Translation - Omar Sharif“இன்னும், உமது கரத்தை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்வித குறையுமின்றி மின்னுகின்ற வெண்மையாக - ஃபிர்அவ்னுக்கும் அவனது மக்களுக்கும் நீர் அனுப்பப்பட்ட ஒன்பது அத்தாட்சிகளில் ஒன்றாக - வெளிவரும். நிச்சயமாக அவர்கள் (அகிலங்களின் இறைவனை நிராகரித்த) பாவிகளான மக்களாக இருக்கிறார்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi12. (மூஸாவே!) நீர் உமது கையை உமது சட்டைப்பைக்குள் புகுத்துவீராக. அது ஒரு மாசற்ற வெண்மையான (பிரகாசத்துடன்) வெளிவரும். (இவ்விரண்டும்) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (இவற்றுடன்) நீர் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய மக்களிடமும் செல்வீராக. நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் மக்களாக இருக்கின்றனர்'' (என்றும் கூறினோம்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70