caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naml அத்தியாயம், வசனம் 11

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 48 · 27:11

إِلَّا مَن ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسْنًۢا بَعْدَ سُوٓءٍ فَإِنِّى غَفُورٌ رَّحِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(எனினும்) தவறிழைத்தவரைத் தவிர. பிறகு, (தான் செய்த) தீமைக்கு பின்னர் அழகிய செயலை மாற்றி செய்தவரைத் தவிர. ஏனெனில், நிச்சயமாக நான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன். (அவரை நான் மன்னித்து விடுவேன்.)
Tamil Translation - Omar Sharif“(எனினும் தூதர்களில்) யார் தவறிழைத்தாரோ அவரைத் தவிர. பிறகு, (தான் செய்த) தீமைக்கு பின்னர் அழகிய செயலை மாற்றி செய்தாரோ அவரை நான் மன்னித்து விடுவேன். ஏனெனில், நிச்சயமாக நான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi11. ஆயினும் தவறிழைத்தவரைத் தவிர. (எனினும்) அவரும் தன் குற்றத்தை (உணர்ந்து அதை மாற்றி) நன்மை செய்தால் நிச்சயமாக நான் (அவரையும்) மன்னித்துக் கருணை செய்வேன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70