وَأَلْقِ عَصَاكَ فَلَمَّا رَءَاهَا تَهْتَزُّ كَأَنَّهَا جَآنٌّ وَلَّىٰ مُدْبِرًا وَلَمْ يُعَقِّبْ يَٰمُوسَىٰ لَا تَخَفْ إِنِّى لَا يَخَافُ لَدَىَّ ٱلْمُرْسَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது தடியைப் போடுவீராக! அவர் அதை -அது பாம்பைப் போன்று- நெளிவதாக பார்த்த போது புறமுதுகிட்டு திரும்பினார். அவர் திரும்பவே இல்லை. மூஸாவே, பயப்படாதீர்! நிச்சயமாக என்னிடம் -இறைத்தூதர்கள்- பயப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif“உமது தடியைப் போடுவீராக! ஆக, அவர் அதை -அது பாம்பைப் போன்று- நெளிவதாக பார்த்தபோது புறமுதுகிட்டு திரும்பி (ஓடி)னார். அவர் திரும்பி பார்க்கவே இல்லை. மூஸாவே, பயப்படாதீர்! நிச்சயமாக என்னிடம் இறைத்தூதர்கள் பயப்பட மாட்டார்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi10. (மூஸாவே!) உமது தடியை நீர் எறிவீராக'' (என்றும் கூறப்பட்டது. அவ்வாறு அவர் அதை எறியவே) அது ஒரு பாம்பைப் போல் (ஆகி) நெளிவதைக் கண்டு அவர் திரும்பியும் பார்க்காது அதை விட்டும் விலகிச் சென்றார். (ஆகவே, நாம் மூஸாவை நோக்கி) மூஸாவே! பயப்படாதீர். நிச்சயமாக என்னிடத்தில் தூதர்கள் பயப்படமாட்டார்கள்.