وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَسْرِ بِعِبَادِىٓ إِنَّكُم مُّتَّبَعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் மூஸாவிற்கு வஹ்யி அறிவித்தோம்: எனது அடியார்களை இரவில் அழைத்துச் செல்லுங்கள். நிச்சயமாக நீங்கள் (உங்கள் எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நாம் மூஸாவிற்கு வஹ்யி அறிவித்தோம், அதாவது “எனது அடியார்களை இரவில் அழைத்துச் செல்லுங்கள். நிச்சயமாக நீங்கள் (உங்கள் எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi52. பின்னர், மூஸாவுக்கு நாம் வஹ்யி அறிவித்ததாவது: ‘‘ (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு நீங்கள் இரவோடு இரவாக சென்றுவிடுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் (அவர்களால்) பின்தொடரப்படுவீர்கள்'' (என்றோம்).