وَٱلَّذِينَ لَا يَشْهَدُونَ ٱلزُّورَ وَإِذَا مَرُّوا۟ بِٱللَّغْوِ مَرُّوا۟ كِرَامًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் பொய்யான செயலுக்கு (இணைவைத்தல், இசைக் கேட்டல், உண்மைக்கு மாற்றமாக நடத்தல், இப்படிப்பட்ட செயல்களுக்கு) ஆஜராக மாட்டார்கள். வீணான செயலுக்கு அருகில் இவர்கள் கடந்து சென்றால் கண்ணியவான்களாக கடந்து சென்று விடுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் (இணைவைத்தல், ஆடல், பாடல், இசை, உண்மைக்கு மாற்றமாக நடத்தல் இன்னும் இதுபோன்ற) பொய்யான செயல்க(ள் நடக்கும் இடங்க)ளில் கலந்துகொள்ள மாட்டார்கள். இன்னும், வீணான செயலுக்கு அருகில் அவர்கள் கடந்து சென்றால் (அதில் ஈடுபடாமல்) கண்ணியவான்களாக கடந்து சென்று விடுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi72. இன்னும், எவர்கள் பொய் சாட்சி சொல்லாமலும் (வீணான காரியம் நடைபெறும் இடத்திற்குச் செல்லாமலும்) ஒருக்கால் (அத்தகைய இடத்திற்குச்) செல்லும்படி ஏற்பட்டு விட்டபோதிலும் (அதில் சம்பந்தப்படாது) கண்ணியமான முறையில் (அதைக் கடந்து) சென்று விடுகிறார்களோ அவர்களும்,